பிரதமர் மோடியை சந்திக்க அதிபர் பைடன் ஆவலுடன் உள்ளார்; அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
பிரதமர் மோடியை ஜி-20 மாநாட்டில் சந்திக்க அதிபர் பைடன் ஆவலுடன் உள்ளார் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் செய்தியாளர்களை சந்தித்துபேசும்போது, பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு சென்று அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்து பேசுவாரா? என நிருபர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சுல்லிவன், அடுத்த ஆண்டு ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது. அதனால், ஜி-20 மாநாட்டில் அதிபர் பைடன் நிச்சயம் கலந்து கொள்ளும் நோக்கத்துடன் உள்ளார்.
அதிபராக பைடன் பொறுப்பேற்று கொண்டதில் இருந்து வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி பல முறை வந்துள்ளார் என சுல்லிவன் பேசும்போது குறிப்பிட்டு உள்ளார்.
அவர்கள் இருவரும் பல்வேறு முறை நேரடியாக சந்தித்தோ, தொலைபேசி வழியாகவோ மற்றும் வீடியோ வழியாகவோ பல முறை பேசியுள்ளனர். இவை எல்லாவற்றையும் வைத்து நீங்கள் பார்க்கும்போது, பல்வேறு நெருக்கடியான விசயங்களில் இருவருக்கும் இடையே சரியான மற்றும் பலனளிக்க கூடிய நட்புறவு இருந்து வருவதுடன், உண்மையில் இந்திய-அமெரிக்க நல்லுறவை வலுப்படுத்த அவர்கள் இருவரும் பணியாற்றி உள்ளனர் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், ஜி-20 மாநாட்டில் இந்த ஆண்டு பிரதமர் மோடியை ஜி-20 மாநாட்டில் சந்திக்க அதிபர் பைடன் ஆவலுடன் உள்ளார். அதுபோக, அடுத்த ஆண்டும் பிரதமர் மோடியை, அதிபர் பைடன் சந்தித்து பேசுவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார்.