ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் 6.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். மீட்புப்பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.11 மணிக்கு ஹெராத் மாகாணத்தின் தலைநகருக்கு வெளியே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story