'ஜி-20' தலைமை பொறுப்பில் இந்தியா: 'பிரதமர் மோடி எங்களை ஒன்றிணைப்பார்' பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நம்பிக்கை


ஜி-20 தலைமை பொறுப்பில் இந்தியா: பிரதமர் மோடி எங்களை ஒன்றிணைப்பார்  பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நம்பிக்கை
x

‘ஜி-20’ அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்த அமைப்பின் உச்சிமாநாட்டை அடுத்த ஆண்டு டெல்லியில் இந்தியா நடத்தவும் உள்ளது.

லண்டன்,

'ஜி-20' அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்த அமைப்பின் உச்சிமாநாட்டை அடுத்த ஆண்டு டெல்லியில் இந்தியா நடத்தவும் உள்ளது.

இதற்கு உறுப்புநாடுகளின் தலைவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், "ஜி-20 தலைமை பொறுப்பில் இந்தியா இருக்கிறபோது, பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்க ஆவலுடன் உள்ளேன்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்... இந்தியா ஜி-20 தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. ஒரு அமைதியான, நிலையான உலகத்தை உருவாக்குவதற்கு என் நண்பர் பிரதமர் மோடி எங்களை ஒன்றிணைப்பார் என்று நான் நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


Next Story