ஜி-20 மாநாடு: இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு


ஜி-20 மாநாடு: இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு
x

பாலியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

பாலி,

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு பாலி நகருக்கு சென்றார்.

இதேபோன்று, மாநாட்டில் பங்கேற்க சீனா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி-20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் சென்றனர்.

இதன்பின், பாலி நகரில் உள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலில் ஜி-20 மாநாடு தொடங்கியது. வந்திருந்த தலைவர்களை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ முறைப்படி வரவேற்றார். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் மாநாட்டில் உரையாற்றினர்.

இந்த நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டின் போது, இத்தாலி பிரதமர் மெலோனியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் சிறப்பான சந்திப்பு நடைபெற்றது. எரிசக்தி, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் காலநிலை மாற்ற ஊக்குவிப்பு போன்ற துறைகளில் இந்தியாவும் இத்தாலியும் எவ்வாறு நெருக்கமாக இணைந்து செயல்பட முடியும் என்பது குறித்து நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். பொருளாதார இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளிலும் கவனம் செலுத்தினோம்." இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.




Next Story