நியூயார்க் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி - உற்சாக வரவேற்பு


நியூயார்க் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி - உற்சாக வரவேற்பு
x

அமெரிக்காவுக்கான அரசு முறை பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் சென்றடைந்தார்.

நியூயார்க்,

பிரதமர் நரேந்திர மோடி முதல் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க காங்கிரசின் கூட்டு அமர்வில் உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவுக்கான அரசு முறை பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி தற்போது நியூயார்க் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூயார்க்கிற்கான தனது பயணத்தின் போது, பிரதமர் இன்று சி.இ.ஓ,க்கள் (CEO), நோபல் பரிசு பெற்றவர்கள், பொருளாதார வல்லுநர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், சுகாதாரத் துறை நிபுணர்களை சந்திக்கிறார்.

நாளை (ஜூன் 21ஆம் தேதி), ஐநா தலைமையகத்தில் நடைபெறும் யோகா தின விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்.




Next Story