எனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்


எனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
x
தினத்தந்தி 20 Dec 2022 3:43 PM IST (Updated: 20 Dec 2022 3:49 PM IST)
t-max-icont-min-icon

தனது பதவிக்காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த முயன்றதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

லாகூர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், தனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பியதாகவும், ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தடையாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் உள்ள அவரது இல்லத்தில் வெளிநாட்டு செய்தியாளர்கள் சந்திப்பின் போது இம்ரான் கான் கூறியதாவது:-

எனது மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன், ஆனால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. ஒரு தடையாக மாறியது.

அப்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா, இந்தியாவுடன் சிறந்த உறவை வைத்துக் கொள்ள இன்னும் அதிக விருப்பம் கொண்டிருந்தார்.

2019 ஆம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகு, இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தனது அரசாங்கம் வலியுறுத்தவில்லை.

இந்தியா முதலில் தனது முடிவை மாற்றிக் கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவரால் மோதலை தீர்க்க முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன். மோடி வலதுசாரி கட்சியில் இருந்து வந்தவர், அதனால் அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று நான் விரும்பினேன்.

ஜெனரல் பாஜ்வா கடந்த ஏழு மாதங்களில் எங்கள் மீது பயங்கர அதிகாரத்தை கட்டவிழ்த்துவிட்டார். நாட்டின் பொருளாதார பேரழிவுக்கு ஜெனரல் பஜ்வாவும் பொறுப்பு.

பொருளாதார முன்னணியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் எனது அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கு ஜெனரல் பஜ்வா முக்கிய காரணமாக இருந்தார்.

அவர் திருடர்களான ஷெரீப்கள் மற்றும் சர்தாரிகளுக்கு ஆதரவாக செயல்பட விரும்பினார் அதனால்தான் அவர் எனது அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்தார். இது தொடர்பாக நீதித்துறை கமிஷன் மூலம் சைபர் விசாரணை மூலம் அமெரிக்காவின் பங்கு தீர்மானிக்கப்பட வேண்டும்.

தற்போது, ஆப்கானிஸ்தான் சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்பது தலைமைப் பொறுப்பில் உள்ள எவருக்கும் தெரியாது. ஆப்கானிஸ்தானுடன் மோதலை பாகிஸ்தான் ஏற்க முடியாது. நமது வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, உலகம் முழுவதும் சுற்றித் திரிவதை விடுத்து ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டும், ஏனெனில் இது மிகவும் தீவிரமான விஷயம் என கூறினார்.


Next Story