பாகிஸ்தானில் பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்க அதிபர் வலியுறுத்தல்


பாகிஸ்தானில் பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்க அதிபர் வலியுறுத்தல்
x

கோப்புப்படம்

பாகிஸ்தானில் பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்க அந்நாட்டின் அதிபர் வலியுறுத்தி உள்ளார்.

இஸ்லாமாபாத்,

காலநிலை மாற்றம் என்பது தற்போது உலக நாடுகள் சந்திக்கும் சவால்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு, வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தானில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது குறித்து அந்த நாட்டின் அதிபர் ஆரிப் அல்வி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காலநிலைக்கு ஏற்ற பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும். இதனால் கார்பன் உமிழ்வு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் புதைபடிவ எரிபொருட்களுக்கான இறக்குமதி செலவு போன்றவற்றை குறைக்க முடியும் என அவர் கூறினார்.

மேலும் நவீன போக்குவரத்து தொழில்நுட்பங்கள் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாட்டின் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story