பாகிஸ்தான் துணை பிரதமராக இஷாக் டார் நியமனம்


பாகிஸ்தான் துணை பிரதமராக இஷாக் டார் நியமனம்
x
தினத்தந்தி 28 April 2024 8:27 PM IST (Updated: 29 April 2024 12:09 PM IST)
t-max-icont-min-icon

நாட்டின் வெளியுறவு மந்திரியாக இஷாக் டார் செயல்பட்டு வந்தார்.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானில் பல்வேறு குழப்பத்துக்கு மத்தியில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தானின் 77 ஆண்டு கால வரலாற்றில் ஷபாஸ் ஷெரீப் அந்நாட்டின் 24-வது பிரதமர் ஆவார்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் டார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை பிரதமர் ஷபாஷ் ஷெரிப், துணை பிரதமராக நியமித்துள்ளார். துணை பிரதமர் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

73 வயதான இஷாக் டார், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் மூத்த அரசியல்வாதி ஆவார். நாட்டின் வெளியுறவு மந்திரியாக இஷாக் டார் செயல்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story