பாகிஸ்தானில் வெள்ளத்தால் கடும் பாதிப்பு; தேசிய அவசர நிலை பிறப்பிப்பு
மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஏதுவாக நிர்வாக வசதிக்காக அவசர நிலையை பாகிஸ்தான் அரசு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
இஸ்லமாபாத்,
பாகிஸ்தானில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணம், கைபர் பக்துன்க்வா , பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் தான் வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ள பாதிப்பால் இதுவரை 937- பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் தேசிய அவசர நிலையை அந்நாட்டு அவசர நிலை பிறப்பித்துள்ளது. மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஏதுவாக நிர்வாக வசதிக்காக அவசர நிலையை பாகிஸ்தான் அரசு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
Related Tags :
Next Story