அமெரிக்காவில் நள்ளிரவில் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி, 26 பேர் காயம்


shooting in Ohio in tamil
x

கெல்லி அவென்யூ மற்றும் 8வது அவென்யூ அருகில் தெருவில் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

அக்ரோன்:

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பொது இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன. துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தவும், துப்பாக்கியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறைந்தபாடில்லை. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், ஒஹியோ மாநிலம் அக்ரோன் நகரில் நேற்று நள்ளிரவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 26 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கெல்லி அவென்யூ மற்றும் 8வது அவென்யூ அருகில் தெருவில் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story