அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் - வடகொரியா ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் அழைப்பு


அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் - வடகொரியா ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் அழைப்பு
x

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.

பியாங்யாங்,

வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்காவும் தென்கொரியாவும் அமெரிக்க அணு ஆயுதங்களை உள்ளடக்கிய கூட்டுப்போர் பயிற்சிகளை விரிவுபடுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ளவும், போரைத் தடுக்கவும் எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதல்களை நடத்தத் தயாராக ராணுவம் இருக்க வேண்டும்" என கூறினார்.

இதனிடையே அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக போராட ராணுவத்தில் சேர சுமார் 14 லட்சம் பேர் முன்வந்துள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.


Next Story