வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி மீண்டும் தோல்வி...!


வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி மீண்டும் தோல்வி...!
x
Credit: PTI
தினத்தந்தி 24 Aug 2023 6:05 PM IST (Updated: 24 Aug 2023 8:12 PM IST)
t-max-icont-min-icon

வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி 2-வது முறையாக தோல்வியில் முடிந்தது.

சியோல்,

கொரிய தீபகற்ப பகுதியில் தொடர் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. வடகொரியா, கடந்த மே மாதம் ராக்கெட் ஒன்றை விண்ணில் ஏவியது. உளவு செயற்கைகோளை சுமந்து கொண்டு சென்ற அந்த ராக்கெட் வெடித்து சிதறியது.

அதன்பிறகு தற்போது சொல்லிமா-1 என்ற ராக்கெட் மூலம் 'மல்லிகியோங்-1' உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. ராக்கெட்டின் முதல் மற்றும் இரண்டாம் நிலைகள் இயல்பான நிலையில் இருந்தபோதிலும் மூன்றாவது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக வெடித்தது.

இதனால் வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி 2-வது முறையாக தோல்வியில் முடிந்ததுள்ளது. இருப்பினும் வடகொரியா தரப்பில், வருகிற அக்டோபர் மாதம் 3-வது முறையாக உளவு செயற்கைக்கோள் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story