வடகொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது - ஜப்பான் அரசு தகவல்


வடகொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது - ஜப்பான் அரசு தகவல்
x

கோப்புப்படம்

வடகொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் டுவீட் செய்துள்ளது.

டோக்கியோ,

கொரிய தீபகற்ப பகுதியில் தொடர் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வடகொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் டுவீட் செய்துள்ளது. அது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் கியோடோ நிறுவனம், டோக்கியோவில் உள்ள அரசாங்கத்தை மேற்கோள் காட்டி, இந்த ஏவுகணை ஜப்பான் மீது பறந்து கொண்டிருந்ததாகக் கூறியது.

இதுதொடர்பாக வட கொரியாவின் ஏவுகணை ஏவுதலுக்குப் பதிலளிக்கும் வகையில் ஜப்பான் பிரதமர் அலுவலகம் அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில்,

1. தகவல்களைச் சேகரிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் அதிகபட்ச முயற்சி எடுக்க வேண்டும், பொதுமக்களுக்கு விரைவான மற்றும் போதுமான தகவலை வழங்க வேண்டும்.

2. விமானம், கப்பல்கள் மற்றும் பிற சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

3. தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்தவாறு தயார்நிலையில் இருப்பது உட்பட முன்னெச்சரிக்கைக்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story