தென்கொரிய கடல்பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை


தென்கொரிய கடல்பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
x

தென்கொரிய கடற்பகுதியில் நேற்று வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது.

சியோல்,

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. ஆனால் வடகொரியா அதனை பொருட்படுத்தாமல் அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதற்கிடையே சமீப காலமாக இரு நாடுகளிடையேயான பனிப்போர் தீவிரம் அடைந்தது. அதன்படி தென்கொரியாவை தனது முதல் எதிரி எனவும், எங்களை சீண்டினால் தென்கொரியா முற்றிலும் அழிக்கப்படும் எனவும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தநிலையில் தென்கொரிய கடற்பகுதியில் நேற்று வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது. ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகமும் இதனை உறுதிப்படுத்தியது. இதனால் அங்கு மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.


Next Story