வடகொரியாவின் முதல் பெண் வெளியுறவுத் துறை மந்திரியாக சோ சான்-ஹூய் நியமனம்


வடகொரியாவின் முதல் பெண் வெளியுறவுத் துறை மந்திரியாக சோ சான்-ஹூய் நியமனம்
x

Image Courtesy : AFP 

வெளியுறவுத் துறை இணை மந்திரியாக சோ சான்-ஹூய் ஏற்கனவே பணியாற்றியுள்ளார்.

சியோல்,

வடகொரியாவின் வெளியுறவுத் துறை மந்திரியாக சோ சான்-ஹூய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடகொரியாவில் இந்த பதவியை பெரும் முதல் பெண் என்ற பெருமையை சோ சான்-ஹூய் பெற்றுள்ளார். வெளியுறவுத் துறை இணை மந்திரியாக ஏற்கெனவே பணியாற்றியுள்ள இவர் தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அதிபர் கிம் ஜாங் உன்-னின் நெருங்கிய உதவியாளராக இருந்த இவருக்கு தூதரகப் பணிகளை மேற்கொண்ட அனுபவம் உள்ளது. தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்து வந்த முன்னாள் ராணுவ அதிகாரி ரீ சான் – குவானுக்குப் பதிலாக சோ சான்-ஹூய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story