உச்சக்கட்ட பதற்றத்தில் வங்காளதேசம்: போராட்டக்காரர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கை


உச்சக்கட்ட பதற்றத்தில்  வங்காளதேசம்: போராட்டக்காரர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கை
x

நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ்க்கு புதிய அரசில் தலைமை ஆலோசகர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று வங்காளதேச போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து, வங்காளதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

உச்சக்கட்ட பதற்றம் நிலவும் வங்காளதேசத்தில் தற்போது, புதிய இடைக்கால அரசு அமைக்க அந்நாட்டு ராணுவம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில், நோபல் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளரும், கிராமிய வங்கி தொடங்கியவருமான முகமது யூனுஸ் (வயது 84) என்ற நிபுணரை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன. முகம்மது யூனூஸ் ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபட்டவராக அறியப்படுகிறார்.

வங்காளதேச நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை முகம்மது யூனுசை அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்று மாணவர் இயக்க பிரதிநிதிகள் நஹித் இஸ்லாம், ஆசிப் முகமது, அபுபக்கர் மஜூம்தார் ஆகியோர் வீடியோ வாயிலாக கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.


Next Story