இந்தியாவுடனான விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குமா? பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை மந்திரி பதில்


இந்தியாவுடனான விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குமா? பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை மந்திரி  பதில்
x

பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை மந்திரி பதிலளித்தார்.

காஷ்மீர் விவகாரம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகள் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக உரசல் போக்கு நீடிக்கிறது.

இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தரைவழி மற்றும் வான்வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதுவரை, பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் லாகூரில் இருந்து டெல்லிக்கு வாரத்துக்கு 2 விமானங்களை இயக்கி வந்தது. அதேபோல் லாகூரில் இருந்து டெல்லிக்கு பஸ் மற்றும் ரெயிலும் இயக்கப்பட்டு வந்தன. இந்த சேவைகள் அனைத்து கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் லாகூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தானின் ரெயில்வே மற்றும் விமான போக்குவரத்து துறை மந்திரி கவாஜா சாத் ரபீக்கிடம் இந்தியாவுடனான போக்குவரத்து மீண்டும் தொடங்குமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "தற்போது, பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை" என பதிலளித்தார்.


Next Story