தாய்நாட்டின் மீதான அன்பின் வெளிப்பாடாக பச்சை குத்திக்கொண்ட உக்ரைன் மக்கள்!


Image Credit: AFP
x
Image Credit: AFP
தினத்தந்தி 18 May 2022 9:52 PM IST (Updated: 19 May 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

பல உக்ரேனியர்கள் பச்சை குத்திக்கொள்வதால், டாட்டூ பார்லர்கள் வாடிக்கையாளர்களுடன் படு பிசியாக உள்ளன.

கீவ்,

ரஷியாவுடன் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், உக்ரைன் மக்கள் பச்சை குத்திக்கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தாய்நாட்டின் மீதான அன்பின் வெளிப்பாடாக உக்ரேனியர்கள் தங்கள் உடலில் டாட்டூ குத்திக்கொள்கின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற "கலை ஆயுதம்" திருவிழாவில், டாட்டூ குத்திக்கொள்வதன் மூலம், மக்கள் தங்கள் தேசத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள அன்பைக் வெளிக்காட்டியுள்ளனர். இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை அன்று, கைவிடப்பட்ட சோவியத் கால தொழிற்சாலை ஒன்றில் நடைபெற்றது. அவர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்த பச்சை குத்திக்கொள்வதை தேர்ந்தெடுத்தனர்.

பல உக்ரேனியர்கள் பச்சை குத்திக்கொள்வதால், டாட்டூ பார்லர்கள் வாடிக்கையாளர்களுடன் படு பிசியாக உள்ளன.
27 வயதான டாட்டூ கலைஞர் ஜெனியா கூறுகையில், வாடிக்கையாளர்களிடமிருந்து தேசபக்தியை வெளிக்காட்டும் விதமாக, பச்சை குத்துவதற்கான கோரிக்கைகள் அதிகரித்து காணப்பட்டதாக கூறினார். மேலும் அவர் கூறியதாவது, "போர் மக்களை மாற்றியுள்ளது. அவர்கள் பச்சை குத்த ஆரம்பித்துள்ளனர். முதல் முறையாக பச்சை குத்திக்கொள்பவர்கள் கூட தேசபக்தியை வெளிக்காட்டும் விதத்தில் டாட்டூ குத்திக்கொண்டனர்" என்றார்.

Next Story