8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பறக்கும் வகை டைனோசாரின் புதிய படிமம் கண்டுபிடிப்பு
8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பள்ளி பேருந்து அளவுள்ள பறக்கும் வகை டைனோசாரின் புதிய படிமம் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
பியூனஸ் அயர்ஸ்,
பூமியில் டைனோசார்கள் என்ற ஒரு வகை உயிரினம் பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்துள்ளது என அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கான பல சான்றுகள் கிடைத்து வருகின்றன.
அவற்றில் நிலத்தில் வாழ்ந்த டைனோசார்களின் காலகட்டத்தில், உருவில் பெரிய பறக்க கூடிய டைனோசார்களும் இருந்துள்ளன. அவை டெரோசார் என அழைக்கப்படுகிறது. மஞ்சள் நிற பள்ளி பேருந்து ஒன்றை போன்று 30 அடி நீளத்தில் அவை பெரிய உருவம் கொண்டவை.
அவற்றை பற்றிய ஆராய்ச்சியில் புதிய தகவல் கிடைத்து உள்ளது. அர்ஜென்டினாவின் மேற்கே மென்டோசா மாகாணத்தில் ஆன்டிஸ் மலைகள் உள்ளன. இதில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு புதிய புதைபடிவம் ஒன்று கிடைத்துள்ளது.
அங்கிருந்த பாறைகளில் கிடைத்த சோதனை மாதிரியில் 8.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புதைபொருளாக படிந்திருந்த டெரோசாரின் மீதங்களை கண்டறிந்துள்ளனர்.
குறைந்தது 2 கோடி ஆண்டுகளுக்கு முன் குறுங்கோள்கள் எனப்படும் பெரிய வகை பாறைகற்கள் பூமி மீது மோதி பெரிதும் தாக்கம் ஏற்படுத்தியது. இதனால், அதற்கு 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்த பூமியின் 4ல் 3 பங்கு உயிரினங்கள் அழிந்து போயின. அதற்கு முன்பு இந்த வகை டெரோசார்கள் வாழ்ந்திருக்க கூடும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த புதைபொருளின் பெரிய எலும்புகள் பெரிய டெரோசார் வகையை சேர்ந்தது என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. தென்அமெரிக்காவில் இதுவரை கண்டறியப்பட்ட டெரோசார்களில் மிக பெரிய புதைபொருள் இதுவாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.