வடகொரியாவின் ராணுவ பலம் இரு மடங்கு ஆக்கப்படும்: கிம் ஜாங் அன் உறுதி
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு அதிர வைத்து வருகிறது.
பியாங்யாங்,
வடகொரியா புத்தாண்டு தினத்திலும் ஏவுகணை சொதனை நடத்தி அதிர வைத்தது. இந்த ஏவுகணை சோதனைக்குப் பிறகு நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கிம் ஜாங் அன் பங்கேற்றார். இந்தக் கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அணு ஆயுத உற்பத்தியை வேகமாக வடொரியா அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிற பகைமை நாடுகளின் ஆபத்தான போக்குக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் வடகொரியாவின் நலனை பாதுகாக்கும் நோக்கிலும் நாட்டில் ராணுவ பலம் இருமடங்காக்கப்படும் என்றும் கிம் ஜாங் அன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story