பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலச்சரிவு: 100 பேர் பலி


பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலச்சரிவு: 100 பேர் பலி
x

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்ட உடல்களை உள்ளூர்வாசிகள் மீட்டெடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

போர்ட் மோர்ஸ்பை,

பப்புவா நியூ கினியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆஸ்திரேலியா நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட துல்லியமான பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-க்கும் மேல் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக்கூடும் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். நிலச்சரிவில் புதையுண்ட உடல்களை உள்ளூர்வாசிகள் மீட்டெடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story