அமெரிக்காவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு: 3,487 ஆக அதிகரிப்பு
அமெரிக்காவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,487 ஆக அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,487 ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்(சிடிசி) தெரிவித்துள்ளது.
உலகளவில் 20 நாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, நியூயார்க்கில் அதிகபட்சமாக 990 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து கலிபோர்னியா (356) மற்றும் இல்லினாய்ஸ் (344) பேருக்கு பதிவாகியுள்ளது.
அதைத்தொடர்ந்து புளோரிடா (273), ஜார்ஜியா (268) மற்றும் டெக்சாஸ் (220) மற்றும் கொலம்பியா மாவட்டம் (139) ஆகிய மூன்று இலக்கங்களில் தொற்று பதிவாகியுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பை சர்வதேச அவசர நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு 23-ம் தேதி அறிவித்தது.
Related Tags :
Next Story