மிஸ் யுனிவர்ஸ் போட்டி: பலர் முன்னிலையில் உள்ளாடைகளை கழற்ற கட்டாயப்படுத்தினர்; அழகிகள் புகார்


மிஸ் யுனிவர்ஸ் போட்டி: பலர் முன்னிலையில் உள்ளாடைகளை கழற்ற கட்டாயப்படுத்தினர்; அழகிகள் புகார்
x

bbc.com

தினத்தந்தி 9 Aug 2023 12:24 PM IST (Updated: 9 Aug 2023 12:27 PM IST)
t-max-icont-min-icon

மிஸ் யுனிவர்ஸ் போட்டியின்போது 20 பேர் முன்னிலையில் மேலாடையின்றி இருக்க சொன்னதாக 6 நாட்டு அழகிகள் புகார் அளித்து உள்ளனர்.

ஜகார்தா,

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 ந்தேதி வரை மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. 3, ஆண்கள் உட்பட 20 பேருக்கு மேல் உள்ள அறையில் உடல் பரிசோதனை என்ற பெயரில் மேலாடையின்றி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக 6 போட்டியாளர்கள் குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு "உடல் சோதனை" மற்றும் புகைப்படங்களுக்காக போட்டியாளர்கள் தங்கள் மேலாடைகளை கழற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்று அவர்களின் வழக்கறிஞர் ஒருவர் கூறி உள்ளார்.

போட்டி அமைப்பாளர்கள், போட்டியாளர்களின் உடலில் ஏதேனும் தழும்புகள், செல்லுலைட் அல்லது பச்சை குத்தப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்" என்று கூறியதாக கூறப்படுகிறது.

"இது என்னை மனரீதியாக பாதித்துள்ளது. இதனால் என்னால் தூங்க முடியவில்லை என்று அழகி ஒருவர் கூறி உள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி அவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க ஒளிபரப்பும்போது அவர்களின் முகங்களை மங்கலாக்கியது.

தலைநகர் ஜகார்தாவில் உள்ள போலீசார் மேலும் விசாரணை நடத்துவதாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா அமைப்பு குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் என்று அதன் உரிமையாளர் பாப்பி கபெல்லா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மிஸ் யுனிவர்ஸ் அமைப்பும் இந்த விஷயத்தை கவனித்து வருவதாகவும், பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை "மிகவும் தீவிரமாக" எடுத்துக் கொள்வதாகவும் கூறி உள்ளது.

மிஸ் யுனிவர்ஸ் அழகு போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். இதில் பங்கேற்கும் அழகிகள் மூன்று சுற்றுகளை சந்திக்க வேண்டும். இந்த சுற்றுகளில், அவர்களின் அழகு, நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை குறித்து சோதனை செய்யப்படுகிறது. பட்டத்தை வெல்ல அழகாக இருப்பது மட்டும் போதாது என்பது தெளிவாகிறது.

மிஸ் யுனிவர்ஸ் ஆக சில விதிகள் உள்ளன. இதில் முதல் விதி, பங்கேற்கும் பெண்ணின் வயது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். அவர் திருமணமாகி இருக்க கூடாது . கர்ப்பமாக இருக்க கூடாது, குழந்தை எதுவும் இருக்க கூடாது.

முதலில் மாலை நேர கவுன் உடை , நீச்சலுடை மற்றும் தனிப்பட்ட பேட்டி ஆகிய செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றன.

மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு முன், ஒவ்வொரு நாடும் அதன் சொந்த நாட்டில் போட்டிகளை நடத்துகிறது. உதாரணமாக, இந்தியாவில் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்லும் போட்டியாளர் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கிறார். அதே நேரத்தில், அதன் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் எண் போட்டியாளர்கள் மற்ற அழகு அல்லது பேஷன் போட்டிகளில் பங்கேற்கலாம்.

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் அல்லது வெற்றிபெற விரும்பும் வேட்பாளர் தேசிய அளவிலான போட்டியில் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

கடந்த மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவின் ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்காக இந்தப் பட்டத்தை ஹர்னாஸ் சூட்டியுள்ளார்.


Next Story