தமிழ்நாடு-சிங்கப்பூர் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழகத்திற்கு ரூ.312 கோடி முதலீடு கிடைகும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹெச்.ஐ.-பி இண்டர்நேஷனல் (Hi-P International Pvt.Ltd.) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன் மூலம் தமிழகத்திற்கு ரூ.312 கோடி முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைகும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வர வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story