காதலுக்கு கண்கள் இல்லை: பெற்றோர் எதிர்ப்பை மீறி 80 வயது முதியவரை கரம்பிடித்த 23 வயது இளம்பெண்


காதலுக்கு கண்கள் இல்லை: பெற்றோர் எதிர்ப்பை மீறி 80 வயது முதியவரை கரம்பிடித்த 23 வயது இளம்பெண்
x

முதியோர் இல்லத்தில் இருவருக்கும் இடையே இருந்த நட்பு, பின் காதலாக மலர்ந்துள்ளது.

பீஜிங்,

காதலுக்கு கண்கள் இல்லை. எப்போது, எங்கே.. யாரிடம் பிறக்கும் என்று சொல்வது கடினம். அப்படியான ஒரு நிகழ்விற்கு எடுத்துக்காட்டுதான் சீனாவின் ஹெபெய் மாகாணத்தை சேர்ந்த 80 வயதான லீ என்ற முதியவரை 23 வயதான சியாபங் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் வசித்து வருபவர் 80 வயதான லீ. இவர் அங்குள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த நிலையில், அங்கு பணிபுரியும் 23 வயது சியாபங் என்ற இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், இறுதியில் இருவரும் காதல் வலையில் விழுந்தனர். இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, சியாபங் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், முதியவர் லீ மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த சியாபங், பெற்றோர் வேண்டாம் என்று கூறிவிட்டு, அவர் கனவு கண்டபடி, முதியவர் லீயை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த புதிய ஜோடியின் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் காதலுக்கு வயதில்லை, காதலுக்கு கண்ணில்லை என்று வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story