கடந்த மாதம் கடல் தற்போது நிலம்... ரஷியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் கசிவு...!


கடந்த மாதம் கடல் தற்போது நிலம்... ரஷியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் கசிவு...!
x

Image Courtesy: AFP

ரஷியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது.

வார்சா,

ஐரோப்பிய நாடுகள் எரிவாயு தேவை பெருமளவு ரஷியாவால் பூர்த்தி செய்யப்படுகிறது. ரஷியாவில் இருந்து நிலம் மற்றும் கடல் வழியாக குழாய்கள் அமைக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.

அந்த வகையில் ரஷியாவில் இருந்து பெலாரஸ் வழியாக போலாந்து, ஜெர்மனிக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. டுருஷப் குழாய் என்று அழைக்கப்படும் இந்த எரிவாயு குழாய் திட்டம் உலகின் மிகப்பெரிய எரிவாயு குழாய் அமைப்பாகும். 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த எரிவாயு குழாய் நிலம் வழியாக அமைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன், பெலாரஸ், போலாந்து, ஹங்கேரி, ஸ்லொவாகியா, செக் குடியரசு, ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ரஷியாவில் இருந்து குழாய் மூலம் எரிவாயு அனுப்பப்படுகிறது. இந்த எரிவாயு குழாய் இரண்டு பிரிவுகளாக பிரிந்து செல்கிறது. ரஷியாவில் இருந்து பெலாரஸ் வழியாக போலாந்து, ஜெர்மனிக்கு எரிவாயு அனுப்பப்படுகீறது. மற்றொரு பிரிவு ரஷியாவில் இருந்து பெலாரஸ் வரை அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாயில் இருந்து ஒரு பிரிவு உக்ரைன் வழியாக ஸ்லோவாகியா, ஹங்கேரி, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளுக்கு எரிவாயு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், ரஷியாவில் இருந்து ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்படும் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. போலாந்து நாட்டின் பிலோக் நகரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இந்த எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக போலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எரிவாயு கசிவுக்கான காரணம் என்ன? எரிவாயு குழாய் வெடிவைத்து தகர்க்கப்பட்டதா? இதில் ஏதேனும் வெளிநாட்டு சதி உள்ளதா? என்பது குறித்து போலாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவை சரிசெய்யும் நடவடிக்கையை போலாந்து அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, கடந்த மாதம் 26-ம் தேதி நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டது. பால்டிக் கடலில் டென்மார்க்-ஸ்வீடன் கடல்பரப்பில் அடுத்தடுத்து எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டது.

ரஷியாவில் இருந்து நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் பால்டிக் கடலுக்கு அடியில் குழாய் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அனுப்பப்படுகிறது. ஜெர்மனிக்கு அனுப்பப்படும் எரிவாயு பின்னர் அங்கிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

இதனிடையே, கடந்த மாதம் 26-ம் தேதி நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டது. பால்டிக் கடலில் டென்மார்க்-ஸ்வீடன் கடல்பரப்பில் அடுத்தடுத்து எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டது. சக்தி வாய்ந்த வெடிபொருள் மூலம் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய்கள் தகர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது.

கடலுக்கு அடியில் சென்ற எரிவாயு குழாயில் கடந்த மாதம் கசிவு ஏற்பட்ட நிலையில் தற்போது ரஷியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு நிலம் வழியா கொண்டு செல்லும் எரிவாயு குழாயிலும் கழிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story