அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது - அதிபர் ஜோ பைடனின் பேச்சால் பொதுமக்கள் குழப்பம்!


அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது - அதிபர் ஜோ பைடனின் பேச்சால் பொதுமக்கள் குழப்பம்!
x

அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மே மாதத்தில் பணவீக்கம் 8 புள்ளி 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாக அதிபர் ஜோ பைடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மே மாதத்தில் பணவீக்கம் 8 புள்ளி 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக பணவீக்கம் உச்சத்தை தொட்டதை அடுத்து மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் இந்த பேச்சுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, மேலும் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

அவர் கூறியதாவது, "உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் நம்மிடம் உள்ளது. நான் பதவியேற்றதில் இருந்து, 8.6 மில்லியன் புதிய வேலைகள் கிடைத்துள்ளன. வேலையின்மை விகிதம் 3.6 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு, நிதிப் பற்றாக்குறையை 320 பில்லியன் டாலர் ஆக குறைத்தோம். நாங்கள் அதை 1.6 டிரில்லியன் டாலர் ஆக மேலும் குறைப்போம்" என்று கூறினார்.

ஏறத்தாழ 118 நாட்களுக்கு பிறகு, கடந்த புதன்கிழமையன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நேர்காணல் பேட்டியளித்தார். அந்த பேட்டியின் போது, அவர் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதும் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார்.


Next Story