ஜப்பான் மன்னர் இந்தோனேசியா பயணம்


ஜப்பான் மன்னர் இந்தோனேசியா பயணம்
x

ஜப்பான் மன்னர் இந்தோனேசியாவுக்கு 3 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜகார்த்தா,

ஜப்பான் மன்னர் நருஹிட்டோ 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தோனேசியா சென்றார். கடந்த 2019-ம் ஆண்டு மன்னராக அவர் முடிசூட்டிய பின்னர் முதல் அதிகாரபூர்வ வெளிநாடு பயணமாக இது அமைந்துள்ளது.

தனது மனைவியும் ராணியுமான மசாகோ உடன் மேற்கொண்டுள்ள இந்த பயணத்தில் இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடோடோவை அவர் சந்தித்தார். முன்னதாக போகோரில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவர்கள் இருவரையும் ராணுவ அணிவகுப்பு மாரியதையுடன் விடோடோ வரவேற்றார். அதில் இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.

இதில் ஜகார்த்தாவில் உள்ள 2-ம் உலக போரின்போது இறந்த தியாகிகளின் கல்லறைகளுக்கு மன்னர் சென்று மரியாதை செலுத்துகிறார். மேலும் ஜாவாவில் உள்ள கலாசார மையத்திற்கும் அவர் செல்வார் என தெரிகிறது. காலநிலை மாற்றம், உணவு பற்றாக்குறை, கனிம வளங்கள் பாதுகாப்பு குறித்து இருநாடுகளும் உரையாட உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story