வெற்றிகரமாக நிலவுக்கு விண்கலம் அனுப்பியது ஜப்பான்!
தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2.ஏ. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
டோக்கியோ,
ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்கான பயண திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக 'ஸ்லிம்' என்ற விண்கலத்தை ஜப்பான் தயாரித்துள்ளது. இந்த விண்கலத்தை எச்.2.ஏ. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டது. இந்த திட்டம் பல்வேறு காரணங்களால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஜப்பான் நாட்டின் தென்மேற்கே ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2.ஏ. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நிலவில் தரையிறங்கும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவை ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் வெற்றி பெற்ற உலகின் 5-வது நாடாக ஜப்பான் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story