ஜப்பான்-பிரான்ஸ் கூட்டு போர்ப்பயிற்சி


ஜப்பான்-பிரான்ஸ் கூட்டு போர்ப்பயிற்சி
x

கோப்புப்படம்

ஜப்பான்-பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து கூட்டு விமானப்படை பயிற்சியை நடத்த உள்ளது.

டோக்கியோ,

ஜப்பான் ராணுவம் பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை கூட்டு விமானப்படை பயிற்சியை நடத்துகிறது. இந்த பயிற்சி ஜப்பானின் மியாசாகி மாகாணத்தில் உள்ள நியுதபாரு விமான தளத்திலும், காண்டோ பகுதியை சுற்றியுள்ள வான்வெளியிலும் நடைபெற உள்ளது.

இதில் ஜப்பானின் 3 எப்.-15 எஸ் உள்பட 7 போர் விமானங்களும், பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான 2 ரபேல் ஜெட் விமானங்கள், ஒரு டேங்கர் விமானம் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட உள்ளன.

இந்த கூட்டு போர்ப்பயிற்சி திறன்களை மேம்படுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு நடத்தப்படுவதாக ஜப்பானின் வான் தற்காப்பு படை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Next Story