ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு..!


ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு..!
x

கோப்புப்படம்

ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ,

ஜப்பான் தனது அண்டை நாடான வடகொரியா, சீனாவின் நடவடிக்கைகளால் அவ்வப்போது பதற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது உள்ள ராணுவத்தின் திறனை கொண்டு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள முடியாது என ஜப்பான் ராணுவ தலைமை தளபதி யோஷிகிடே யோஷிடா நிருபர்களிடம் கூறினார்.

மேலும் மற்ற நாடுகள் குறைத்து மதிப்பிடாமல் இருக்க நமது ராணுவ பலத்தை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். அடுத்தபடியாக அமெரிக்காவின் அணு ஆயுத யுக்தி உள்பட நமது தற்காப்பு திறன்களை உயர்த்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே வருகிற 2027-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு துறைக்கு செலவிடும் தொகையை ரூ.15 லட்சம் கோடியில் இருந்து சுமார் ரூ.24 லட்சம் கோடியாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story