மொசாம்பிக் அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு
மொசாம்பிக் அதிபரை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மபுடோ,
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 6 நாள் பயணமாக ஆப்பிரிக்காவின் உகாண்டா, மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
உகாண்டா நாட்டிற்கு சென்ற ஜெய்சங்கர் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தை நடத்தினார்.
உகாண்டா பயணத்தை முடித்துகொண்டு ஜெய்சங்கர் மொசாம்பிக் நாட்டிற்கு சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் பிலிப் யுசியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
Related Tags :
Next Story