இத்தாலியில் தொடர்ந்து சரியும் பிறப்பு விகிதம்


இத்தாலியில் தொடர்ந்து சரியும் பிறப்பு விகிதம்
x
தினத்தந்தி 31 March 2024 11:07 AM IST (Updated: 31 March 2024 2:01 PM IST)
t-max-icont-min-icon

இத்தாலியில் 2022-ம் ஆண்டைவிட 2023-ம் ஆண்டு சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரோம்,

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதுதொடர்பாக அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி கடந்த 2022-ல் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 379,000 குழந்தைகள் பிறந்துள்ளன. முந்தைய ஆண்டை விட சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி நாட்டில் 5.80 கோடி மக்கள் வசிக்கின்றனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 7000 பேர் குறைவு ஆகும்.

அதேசமயம் வெளிநாடுகளில் இருந்து இத்தாலிக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி அங்கு குடியேறி உள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 53 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த மக்கள்தொகையில் வெளிநாட்டு வம்சாவளியை சேர்ந்தவர்கள் 9 சதவீதம். இது மக்கள்தொகை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த உதவியாக இருப்பதாக உள்ளூர் அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.


Next Story