இத்தாலி பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அதிபர்


இத்தாலி பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அதிபர்
x

Image Courtesy: ANI 

தினத்தந்தி 15 July 2022 6:18 AM IST (Updated: 15 July 2022 6:23 AM IST)
t-max-icont-min-icon

இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் ராஜினாமா கடிதத்தை அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லா நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோம்,

இத்தாலியில் மரியோ டிராகி பிரதமராக பதவி வகித்து வருகிறார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார்.

இத்தாலியில் பொருளாதார நிலை தற்போது மிகவும் மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து, மரியோ டிராகி திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் ராஜினாமா கடிதத்தை அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லா நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அரசியல் நிலவரத்தை பற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் படி பிரதமரை அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.


Next Story