இஸ்ரேலில் பாலஸ்தீனியரை சுட்டு கொன்ற போலீசார்
இஸ்ரேலில் பாலஸ்தீனியரை போலீசார் சுட்டு கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜெருசலேம்,
இஸ்ரேலின் பழைய ஜெருசலேம் நகரத்தில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் நேற்று முன்தினம் புனித ரமலான் மாதத்தையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 1 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
இதையாட்டி மசூதியின் நுழைவாயிலான செயின் கேட் பகுதியில் இஸ்ரேல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு போலீஸ்காரரிடம் இருந்து பாலஸ்தீனியர் ஒருவர் துப்பாக்கியை பறிக்க முயன்றார். இதனால் போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் போலீசாருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story