ஐ.நா.வில் உரையை முடித்த நெதன்யாகு: லெபனான் மீது தாக்குதலை துவக்கியது இஸ்ரேல் ராணுவம்


ஐ.நா.வில் உரையை முடித்த நெதன்யாகு: லெபனான் மீது தாக்குதலை துவக்கியது இஸ்ரேல் ராணுவம்
x

ஹிஸ்புல்லாவை ஒழித்துக்கட்டும் வரை தாக்குதலை நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

நியூயார்க்:

இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஓராண்டை நெருங்கி உள்ளது. ஹமாஸ் அமைப்பின் அக்டோபர்-7 தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 41,500 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 96,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரை முடிந்த நிலையில், லெபானின் தெற்கு எல்லை பகுதியான தாஹியேக் பகுதியை இஸ்ரேல் ராணுவம் தாக்க துவங்கியது. இதில் பதுங்கு குழிகள் மீது குண்டு வீசப்பட்டதில் 4 கட்டடங்கள் தரைமட்டாகின.. தொடர்ந்து ஹிஸ்புல்லா முக்கிய தலைவர் ஹூசைன் நஸ்ரல்லாஹா இருப்பிடமான தலைமை அலுவலகம் மீது இஸ்ரேல் ராணுவம் குறி வைத்து தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஐ.நா. பொதுச்சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , ஹிஸ்புல்லாவை ஒழித்துக்கட்டும் வரை தாக்குதலை நிறுத்த முடியாது என திட்டவட்டமாக கூறினார்.


Next Story