ஈரானில் நடப்பாண்டில் சிறுபான்மையின மக்கள் 105 பேர் தூக்கிலிடப்பட்ட கொடூரம்; ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!


ஈரானில் நடப்பாண்டில் சிறுபான்மையின மக்கள் 105 பேர் தூக்கிலிடப்பட்ட கொடூரம்; ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
x

ஈரானில் நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் 105 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

ஜெனிவா,

ஈரானில் நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் 105 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்றது. இதில் ஈரானில் தேவையற்ற மரண தண்டனைகள் குறித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்துப் பேசிய பேரவைத் துணைத் தலைவர் நடா அல்-நஷிப், "2020ம் ஆண்டு 260 பேரும், கடந்த ஆண்டு ௧௪ பெண்கள் உள்பட 310 பேரும், இதேபோன்று தூக்கிலிப்பட்டதாகவும், நடப்பாண்டும் அது தொடர்வதாகவும்" அவர் கவலை தெரிவித்தார்.

ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 'தூக்கிலிடப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்தவர்கள்.மிகக் கடுமையான குற்றங்கள் அல்லாத விஷயங்களுக்குக் கூட, மரண தண்டனை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரானில் நியாயமான விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என்றும், சர்வதேச சட்டத்தை மீறி சிறார் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனையை ஈரான் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் குற்றம் சாட்டினார்.

மறுபுறம், இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. இது பாரபட்சமான குற்றச்சாட்டு என ஈரான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story