இலங்கையில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் விசாரணை


இலங்கையில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் விசாரணை
x

மே 9-ல் இலங்கையில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

கொழும்பு

இலங்கையில் மே 9-ல் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகுவதற்கு முன்னர், அவருக்கு ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது இதில் 10 பேர் வரை உயிரிழந்தனர்.இந்த வன்முறை தொடர்பாக இரண்டு எமபிக்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொழும்பில் உள்ள இல்லத்தில் மகிந்த ராஜபக்சேவிடம் சி.ஐ.டி. போலீசார் 5 மணிநேரம் விசாரணை நடத்தினர். ஏற்கனவே மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவிடம் விசாரணை நடைபெற்றது.


Next Story