இந்தோனேசியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் சுகாதார பணியாளர்களுக்கு 2-வது 'பூஸ்டர் டோஸ்'
இந்தோனேசியாவில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 9,353 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 9,353 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்குள்ள 19 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனாவுக்கு எதிராக 2-வது 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போடும் திட்டம் நேற்று தொடங்கி உள்ளது. நாட்டின் தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரையின் பேரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சுகாதார பணியாளர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் ஆபத்து கொண்டவர்கள் எனவும் அந்த நாட்டின் சுகாதார அமைச்சக செய்தி தொடர்பாளர் வித்யாவதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story