சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய இந்திய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை


சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய இந்திய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
x

சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய இந்திய அதிகாரிக்கு 3 ஆண்டு விதித்து அந்த நாட்டின் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியான பிரேம் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் விமானத்துக்குள் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வழங்கும் அதிகாரியாக கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போது லஞ்சம் வாங்கிக் கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு அந்த நாட்டின் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் முடிவடைந்தது. இதில் பிரேம் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் 2 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.4.62 லட்சம் அபராதம் விதித்தும் அந்த நாட்டின் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 15 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story