ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபருக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா!


ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபருக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா!
x

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் காணொலி வாயிலாக பங்கேற்பதை எதிர்த்து ரஷியா எதிராக வாக்களித்தது.

நியூயார்க்,

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காணொலி வாயிலாக உரையாற்ற அனுமதிக்கும் ஒரு முன்மொழிவுக்கு இந்தியா உட்பட 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியதும், ஐ.நா.சபைக்கான ரஷிய தூதர் வசிலி ஏ நெபென்சியா இந்த பிரச்சினையில் நடைமுறை வாக்கெடுப்பைக் கோரினார்.

அதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் காணொலி வாயிலாக பங்கேற்பதை எதிர்த்து ரஷியா எதிராக வாக்களித்தது. சீனா வாக்களிக்காமல் புறக்கணித்தது.

அதே வேளையில், ஐ.நா. கூட்டத்தில் உக்ரைன் அதிபர் நேரடியாக கலந்து கொள்வதை ரஷிய தரப்பில் எதிர்க்கவில்லை என்று கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் பங்கேற்பார் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜாங் ஜுன் தெரிவித்தார்.


Next Story