தலாய்லாமாவுக்கு வாழ்த்து: பிரதமர் மோடிக்கு சீனா எதிர்ப்பு ''எங்கள் உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம்''


தலாய்லாமாவுக்கு வாழ்த்து: பிரதமர் மோடிக்கு சீனா எதிர்ப்பு எங்கள் உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம்
x

சீனா தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை பிரிவினைவாதி என்று குற்றம்சாட்டி வருகிறது.

பீஜிங்,

சீனா தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை பிரிவினைவாதி என்று குற்றம்சாட்டி வருகிறது. தலாய்லாமாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் விமர்சித்து வருகிறது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் 87-வது பிறந்தநாள் கொண்டாடிய தலாய்லாமாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

இதற்காக அவரை சீனா நேற்று விமர்சனம் செய்தது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:-

தலாய்லாமாவின் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத இயல்பை இந்திய தரப்பு முழுமையாக உணர வேண்டும். சீனாவுக்கு அளித்த உறுதிமொழியை இந்திய தரப்பு காப்பாற்ற வேண்டும். அதற்கேற்ப பேசவும், செயல்படவும் வேண்டும்.

சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு திபெத் சார்ந்த விவகாரங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல், தலாய்லாமாவுக்கு வாழ்த்து கூறிய அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனையும் அவர் விமர்சித்தார்.


Next Story