பாகிஸ்தானில் கால்நடை எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த நிதியாண்டை காட்டிலும் கால்நடைகள் எண்ணிக்கை பாகிஸ்தானில் கணிசமாக உயர்ந்துள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கால்நடை கணக்கெடுப்பை நடத்த நீதித்துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் நீதி மந்திரி முகமது அவுரங்கசீப் கால்நடை கணக்கெடுப்பு அறிக்கையை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார்.
மேலும் அந்த கணக்கீட்டின்படி நாட்டில் 8¾ கோடி வெள்ளாடுகள், 3 கோடி செம்மறி ஆடுகள், காளைகள் மற்றும் எருமைகள் 4½ கோடி, பசுக்கள் 5½ கோடி மற்றும் 59 லட்சம் கழுதைகள் உள்ளது தெரியவந்துள்ளது.
1 கோடி. ஒட்டகங்களும், 30 லட்சம் குதிரைகளும் பாகிஸ்தானில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை காட்டிலும் கால்நடைகள் எண்ணிக்கை பாகிஸ்தானில் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story