சிங்கப்பூரில் 'வேர்களைத் தேடி' சுற்றுலா திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


சிங்கப்பூரில் வேர்களைத் தேடி சுற்றுலா திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x

‘வேர்களைத் தேடி’ என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சிங்கப்பூர்,

அயலக தமிழர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு பண்டைய தமிழர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள், ஆபரணங்கள், கலை, இலக்கிய பண்பாடு மற்றும் தமிழர்கள் குறித்த தொல்லியல் ஆய்வுகள் ஆகியவை பற்றி அறிமுகப்படுத்தும் வகையில் 'வேர்களைத் தேடி' என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டம் சிங்கப்பூரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி ஆண்டுதோறும் அயலக தமிழர்களில் 200 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர். இந்த திட்டப்படி முதற்கட்டமாக 10 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான தெரிவு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.




Next Story