தொழுகையின் போது இமாம் மீது பாய்ந்த பூனை...! பிறகு நடந்தது என்ன...?


தொழுகையின் போது இமாம் மீது பாய்ந்த பூனை...! பிறகு நடந்தது என்ன...?
x

அல்ஜீரியாவில் உள்ள போர்ட்ஜ் ப அரேரஜ் நகரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. மசூதி ஒன்றில் இமாம் வாலித் மெஹ்சனின் தொழுகை நடத்தி கொண்டிருந்தார்.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு இருக்கும் காலம் இது. இந்தச் சூழலில் திரளானவர்கள் ஒன்று கூடி மசூதியில் தொழுகை நடத்தி வருவார்கள் அதை இமாம் ஒருவர் தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது பூனை ஒன்று அவர் மீது பாய்கிறது. அதைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட செயல் பரவலான இணையவாசிகளை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அல்ஜீரியாவில் உள்ள போர்ட்ஜ் அரேரஜ் நகரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. மசூதி ஒன்றில் இமாம் வாலித் மெஹ்சனின் தொழுகை நடத்தி கொண்டிருந்தார். அப்போது பூனை ஒன்று அவர் மீது பாய்கிறது. அவர் பூனையை விரட்டாமல் அரவணைக்கிறார். அதேநேரத்தில் வழிபாட்டையும் நிறுத்தவில்லை. தொழுகைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இமாம் ஒரு கையால் பூனையைப் பாதுகாக்கிறார்.சில நொடிகளில் அந்தப் பூனை அவரிடமிருந்து சென்றுவிடுகிறது. அந்த வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைராலகி உள்ளது.



Next Story