உலகிலேயே முதல் முறையாக அழகிப்போட்டியில் வென்ற 60 வயது பெண்


உலகிலேயே முதல் முறையாக அழகிப்போட்டியில் வென்ற 60 வயது பெண்
x

அர்ஜென்டினாவில் அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற 60 வயது பெண் அழகி போட்டியில் வெற்றி பெற்று மகுடம் சூடியிருக்கிறார்.

பியூனோஸ் அர்ஸ்,

உலக அளவில் ஆண்டுதோறும் பிரபஞ்ச அழகிப்போட்டி (மிஸ் யூனிவர்ஸ்) நடந்து வருகிறது. இதில் 18 வயது முதல் 28 வயது வரையிலான இளம்பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால் இந்த வயது வரம்பை பிரபஞ்ச அழகிப்போட்டி அமைப்பு கடந்த ஆண்டு நீக்கியது. அதன்படி இந்த ஆண்டு முதல் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யாரும் இந்த போட்டியில் பங்கேற்க முடியும்.

இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பியூனோஸ் அர்ஸ் மாகாணத்துக்கான பிரபஞ்ச அழகிப்போட்டி நடந்தது. இதில் அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற 60 வயது பெண் வெற்றி பெற்று மகுடம் சூடியிருக்கிறார். இந்த வெற்றி குறித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், இது ஒரு புதிய முன்னுதாரணத்தை பிரதிபலிப்பதாக கூறியுள்ளார்.

அர்ஜென்டினாவின் தேசிய அளவிலான பிரபஞ்ச அழகிப்போட்டி அடுத்த மாதம் (மே) நடக்கிறது. இதில் பியூனோஸ் அர்ஸ் மாகாணம் சார்பில் பங்கேற்கும் அலஜாண்டிரா வெற்றி பெற்றால், செப்டம்பர் மாதம் மெக்சிகோவில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப்போட்டியில் அர்ஜென்டினா சார்பில் பங்கேற்பார். அழகிப்போட்டியில் 60 வயது பெண் ஒருவர் வெற்றி பெற்றிருப்பது அர்ஜென்டினாவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story