விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகள் இறக்குமதி - இலங்கை அரசு தகவல்
விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
கொழும்பு,
நமது அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி நெருக்கடி காரணமாக கால்நடை தீவன இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியால் அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் முட்டைகளுக்கு தட்டுப்பாடு உருவானது. அப்போது முதல், இலங்கை அரசு இந்தியாவில் இருந்து முட்டைகளை நம்பியுள்ளது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து 20 லட்சம் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்தது.
இந்த நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் வழங்கவும் இந்தியாவில் இருந்து 9 கோடியே 20 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
தலைநகர் கொழும்பில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி சபை செய்தி தொடர்பாளரும், ஊடகத்துறை மந்திரியுமான பந்துல குணவர்தனே தெரிவித்தார்.
Related Tags :
Next Story