பாகிஸ்தானில் விமரிசையாக கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை


பாகிஸ்தானில் விமரிசையாக கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை
x

பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள இந்துக்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் மீது வண்ணப் பொடிகளை தூவியும், சினிமா பாடலுக்கு நடனம் ஆடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அவர்களது இந்த கொண்டாட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில் பாகிஸ்தானின் மக்கள்தொகையில் வெறும் 2 சதவீதம் பேர்தான் இந்துக்கள். அதுமட்டுமின்றி சமீப காலங்களில் அங்கு வசித்து வரும் இந்து மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது கராச்சி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story