பாகிஸ்தான் கராச்சியில் இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டு, சிலைகள் அழிப்பு
பாகிஸ்தான் கராச்சியில் இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டு, தெய்வ சிலைகள் அழிக்கப்பட்டன
கராச்சி
பாகிஸ்தானின் கராச்சியின் கோரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரி மாதா கோவிலில் உள்ள தெய்வச் சிலைகள் நேற்று அடித்து நொறுக்கப்பட்டன.
தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு வந்து கோவிலை பார்வையிட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
நாட்டில் சிறுபான்மை சமூகத்தின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான சமீபத்திய நாசவேலை சம்பவம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கராச்சியில் வசிக்கும் இந்து சமூகத்தினரிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியதாக தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் சஞ்சீவ் கூறியதாவது:- ஆறு முதல் எட்டு நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் அப்பகுதிக்குள் வந்து கோவிலை தாக்கினர். "யார் தாக்கினார்கள், எதற்காக தாக்கினார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை," போலீசாரிடம் புகார் அளித்து உள்ளோம் என கூறினார்.
சமீபகாலமாக பாகிஸ்தானில் இந்து கோயில்கள் பெரும்பாலும் கும்பல் வன்முறைக்கு இலக்காகின்றன. அக்டோபரில், கோட்ரியில் சிந்து நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயில் அடையாளம் தெரியாத நபர்களால் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிகாரபூர்வ மதிப்பீட்டின்படி பாகிஸ்தானில் 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். இருப்பினும்,கணக்குப்படி படி, 90 லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் நாட்டில் வாழ்கின்றனர். பாகிஸ்தானின் பெரும்பான்மையான இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் வாழ்கின்றனர். அங்கு அவர்கள் கலாபயங்கரவாதிகளால் துன்புறுத்தப்படுவதாக புகார் கூறுகின்றனர்.