ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து - அதிர்ச்சி சம்பவம்


ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து - அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 19 May 2024 7:48 PM IST (Updated: 20 May 2024 1:20 PM IST)
t-max-icont-min-icon

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெஹ்ரான்,

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (வயது 63). இவர் இன்று காலை அண்டை நாடான அசர்பைஜானுக்கு சென்றிருந்தார். அசர்பைஜான் - ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கை புதிதாக அணை கட்டப்பட்டுள்ளது.

அந்த அணை திறப்பு விழாவிற்காக இப்ராகிம் ரைசி இன்று அசர்பைஜான் சென்றிருந்தார். அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கருதப்படும் பகுதியில் கடுமையான மழை மற்றும் பனி மூட்டம் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டரில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியும் பயணித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்டோரின் நிலை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.


Next Story